தமிழ்நாடு

tamil nadu

‘மே 19ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ - முத்தரசன்

By

Published : May 16, 2020, 7:05 PM IST

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 19ஆம் தேதி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அவரவர் வீடுகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிடுகிறாரே தவிர செயல்முறையில் ஏதும் இல்லை. மத்திய அரசு இலவச ஆலோசனைகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது. மாநில அரசு கேட்டும் நிதியை வழங்காமல் வெறுங்கையில் முழம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மாநில அரசும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்தது என இருக்கிறது. டாஸ்மாக் கடை திறப்பது என்பது 10ஆயிரம் எண்ணிக்கையில் உள்ள கரோனா பாதிக்கப்பட்டோரை பல ஆயிரமாக உயர்த்தும். அதனால் மே 19ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details