தமிழ்நாடு

tamil nadu

கல்லணையில் காலடி வைக்கும் ஸ்டாலின்

By

Published : Jun 11, 2021, 10:03 AM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு மேற்கொள்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கல்லணையில் காலடி வைக்கும் ஸ்டாலின்
கல்லணையில் காலடி வைக்கும் ஸ்டாலின்

தஞ்சை: காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தஞ்சை வருகிறார்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வருகை தரும் மு.க. ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் கல்லணையில் காலை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து அங்கு தூர்வாரப்படும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

முதலமைச்சர் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக கல்லணையில் பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகள், பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து எஸ்பி திருநாவுக்கரசு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டிஐஜி பிரேவேஷ் குமார், எஸ் பி தேஸ்முக் சஞ்சய் சேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்தனர். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து நாளை கார் மூலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை செல்லும் முதலமைச்சர், அங்கு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியப்பின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவைக்கவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details