தமிழ்நாடு

tamil nadu

தஞ்சாவூரில் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு

By

Published : Apr 7, 2023, 10:31 PM IST

தஞ்சாவூரில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

தஞ்சாவூரில் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு
தஞ்சாவூரில் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு

தஞ்சாவூரில் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு

தஞ்சாவூர்: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு கூர்நோக்கு இல்லத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் (புதுடெல்லி), தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்டோர் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்து அங்கு உள்ள மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆணைய உறுப்பினர் ஆனந்த், “Monitering App for seemless Inspection App மூலம் இந்தியாவில் உள்ள குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்களில் எவ்வாறு வசதி உள்ளது, கடைசியாக யார் ஆய்வு செய்துள்ளனர். அவருடைய கருத்துக்கள் என்ன என்ற வசதியினை டெல்லியில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்” என கூறிய அவர் அதற்காக கண்டிபிடிக்கப்பட்ட அரசு செயலியை அறிமுகப்படுத்தி விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “போக்சோ, குழந்தை திருமணம் ஆகியவை மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவில் அதிகமாக உள்ளன. குறிப்பாக தஞ்சாவூரில் குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. உலகளவில் சுற்றுலா இடமாகத் திகழும் தஞ்சாவூரில் அறிக்கைகளும் அதிகமாக உள்ளன, விழிப்புணர்வும் அதிகமாக உள்ளன. குழந்தைகள் பாதுகாப்பிற்கு 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகள் அதிகமாக வர வேண்டும் என்பதே தங்களின் நோக்கம்.

புள்ளியல் விவரங்களின் படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 836 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு அரசு குழந்தைகள் தேர்வு எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். நீட் தேர்விற்கு ஒரு முடிவு வரும் வரை அவதூறான விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் படிக்கும் மாணவர்களுக்கு மனரீதியான அழுத்தம் ஏற்படும். ஆகவே அவதூறுகளை பரப்ப வேண்டாம்.

தஞ்சாவூரில் இரண்டு இடங்களில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளனர். அதற்கு உண்டான நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட வேண்டும். இதனைத் தடுக்க கொத்தடிமை தொழிலாள குழந்தைகளுக்கு NCPCR Benches அமைக்கப்பட்டு குழந்தைகள் தொடர்பான புகார்கள் தரப்பட்ட 5 நிமிடத்தில் தீர்வு காணும் வகையில் தஞ்சாவூரில் அமல்படுத்தப்படும்.

குழந்தைகள் இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பிச் செல்கின்றனர். இது போன்ற குற்றங்கள் நடப்பது சிறுவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும். அவ்வாறு நடப்பதால் சட்டம் ஒழுங்கு சரி இல்லையோ என்ற எண்ணம் சராசரி மனிதனுக்கு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்த எண்ணத்தை கொடுக்காமல் தமிழ்நாடு அரசாங்கம் கூர்ந்து கவனித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் படம் அங்குள்ள டேபிளில் வைக்கப்பட்டிருந்தது. அதை எஸ்பி ஆசிஸ் ராவத் எடுத்து தனது உதவியாளரிடம் கொடுத்தார். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த படம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் சிலர் பிரதமர் படம் மட்டுமே உள்ளது முதலமைச்சரின் படத்தையும் வைக்கலாமே என்று கேட்டனர்.

அதற்கு நாட்டின் பிரதமர் என்ற முறையில் பிரதமர் படம் வைக்கப்பட்டது. அதுபோல் முதலமைச்சரின் படம் வைப்பதில் தவறில்லை, இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எதார்த்தமாக நடக்கப்பட்டது என்று ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் விளக்கமளித்தார். பின்னர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் முதலமைச்சரின் படத்தை உடனடியாக கொண்டு வந்து அதே டேபிளில் வைத்தனர்.

இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற விசாரணை தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ஜாதி சான்றுக்கு ரூ.300 லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு ஓராண்டு ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details