தமிழ்நாடு

tamil nadu

திடீரென உடைந்த ராட்சத குடிநீர் குழாய் - 967 கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிப்பு?

By

Published : Sep 24, 2022, 7:50 AM IST

Updated : Sep 24, 2022, 9:21 AM IST

கும்பகோணம் அருகே வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் ராட்சத குழாய் உடைந்ததால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு 967 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.

திடீரென இடிந்த ராட்சத குடிநீர் குழாய் - 967 கிராமங்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கு குடிநீர் இல்லை?
திடீரென இடிந்த ராட்சத குடிநீர் குழாய் - 967 கிராமங்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கு குடிநீர் இல்லை?

தஞ்சாவூர்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி , திருமருகல் மற்றும் தலைஞாயிறு உள்ளிட்ட 967 கிராமங்களுக்கு, கும்பகோணம் அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலைய ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவ்வாறு காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டது.

இதனால் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் 60 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி நீரேற்று நிலையம் உள்ள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, குடிநீர் குழாய் செல்லும் பாலம் கடந்த 19 ஆம் தேதி இடிந்து விழுந்துள்ளது.

திடீரென இடிந்த ராட்சத குடிநீர் குழாய் - 967 கிராமங்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கு குடிநீர் இல்லை?

இதனை சீரமைக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, குடிநீர் ராட்சத குழாய்கள் மற்றும் குழாய்கள் செல்லும் பாலம் என இரண்டும் கீழே விழுந்து நொறுங்கியது.

அப்போது அப்பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இவ்வாறு பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்த இரு வாரங்களில் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அடுத்த இரு வாரங்களுக்கு 967 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க:நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக திறக்கப்பட்ட காவிரி நீர்

Last Updated :Sep 24, 2022, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details