தமிழ்நாடு

tamil nadu

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் இனிப்பு வழங்கிய அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 6:03 PM IST

Hanuman Sena State Secretary Arrested: பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 06ஆம் தேதியான இன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் இனிப்பு வழங்கிய அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா உட்பட 6 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Hanuman Sena State Secretary Arrested
பாபர் மசூதி இடிப்பு தினத்தில் இனிப்பு வழங்கிய அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் கைது

தஞ்சாவூர்:உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 6ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை இந்துக்களின் வெற்றி தினம் என கூறியும் உத்தரபிரதேஷ முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் முன்பாக இந்து மக்கள் அனுமன் சேனா சார்பில் பொது மக்களுக்கு மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் நிர்வாகிகள் லட்டுகள் வழங்கி கொண்டாடினர்.

அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 06ஆம் தேதியான இன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் இனிப்பு வழங்கி கொண்டாடியமைக்காக, இந்து மக்கள் அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா உட்பட 6 நிர்வாகிகளைக் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து ஸ்ரீநகர் காலணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா கூறுகையில், "உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் பணிகள் முழுமை பெற்று வருகிற ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் காண உள்ளது இந்த நிகழ்வில் பங்கேற்க, தமிழகம் முழுவதும் இருந்து அயோத்திக்கு ஒரு லட்சம் பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்ல இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்த குழு வருகிற ஜனவரி 18ஆம் தேதி வியாழக்கிழமை கும்பகோணத்தில் இருந்து அயோத்தி புறப்படுகிறது முன்னதாக வருகிற டிசம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள 21 முக்கிய புனித நதிகளில் இருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள புனிதநீர் கலசங்கள் அயோத்தி கொண்டு சென்று அங்கு நடைபெறும் கும்பாபிஷேக யாகசாலையில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் 7 மணி நேரத்திற்குள் வடிந்துவிடும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details