தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் தஞ்சையில் முதன்முறையாக திருநங்கைக்கு சந்தையில் கடை ஒதுக்கீடு!

By

Published : Dec 28, 2022, 8:41 PM IST

தஞ்சாவூர் காமராஜ் மார்க்கெட்டில் திருநங்கை சத்யாவிற்கு முதல்முறையாக கடை ஒதுக்கீடு செய்து, மேயர் ராமநாதன் காய்கறி வியாபாரம் செய்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தஞ்சையில் முதன் முறையாக திருநங்கைக்கு கடை ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் தஞ்சையில் முதன் முறையாக திருநங்கைக்கு கடை ஒதுக்கீடு!

தஞ்சாவூரில்வடக்கு வீதி பகுதியில் மிகவும் பிரபலமான காமராஜர் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த காய்கறி மார்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.20 கோடி மதிப்பில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கொண்டு, புதிதாக கட்டப்பட்டது.

இந்த கடைகள் ஏலம் விடப்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு, அவை பின்னர் சரி செய்யப்பட்டு, முன்பு இருந்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் திருநங்கை சத்யா என்பவருக்கும் முதல்முறையாக கடை ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று முதல் வியாபாரிகள் காய்கறி மார்க்கெட் கடையைத் தொடங்கியுள்ளனர். அதைப்போல் திருநங்கை சத்யாவின் கடையினை தொடங்கி வைக்க வந்த மேயர் ராமநாதன் தரையில் உட்கார்ந்து காய்கறி வியாபாரம் செய்தார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள சந்தையில் திருநங்கைக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

இதையும் படிங்க:மாமியாராக அதிமுக.. மருமகளாக திமுக.. ஈபிஎஸ் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details