தமிழ்நாடு

tamil nadu

தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் இடையே மோதலா?

By

Published : May 29, 2019, 11:32 PM IST

தஞ்சாவூர்: டிடிவி தினகரன் பங்கேற்ற அமமுக பொருளாளர் இல்லத் திருமண விழாவிற்கு தங்க தமிழ்ச்செல்வன் வராததது, கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன்

தஞ்சாவூரில் அமமுக பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரெங்கசாமி மகன் வினோபாரத் திருமணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் பேசிய தினகரன், "தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மண்ணுக்கு வந்து மீண்டும் எழுச்சியோடு பொருளாளரின் இல்ல நிகழ்ச்சியின் மூலம் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். பலவிதமான சோதனைகள் மூலம் நிச்சயம் நம்மை அரசியல் ரீதியாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்தவர்கள் இப்போது வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம். நாங்கள் தொடர்ந்து எழுச்சியோடு செயல்படுவதோடு தமிழ்நாட்டின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற நினைப்புடன் செயல்படுவோம்" என்றார்.

தினகரன்

இந்த திருமண விழாவில், தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்கவில்லை. தினகரன் எப்போது தஞ்சை வந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன் உடன் வருவது வழக்கம். ஆனால், தேர்தல் தோல்வியால், இருவருக்குமிடையே அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தஞ்சாவூர் மே 29


தஞ்சாவூரில் அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ரெங்கசாமி மகன் வினோபாரத் - அபிநயா திருமணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.

தினகரன் பேசுகையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மண்ணுக்கு வந்து மீண்டும் எழுச்சியோடு பொருளாளரின் மங்களகரமான இல்ல நிகழ்ச்சியின் மூலம் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். பலவிதமான சோதனைகள் மூலம் நிச்சயம் நம்மை அரசியல் ரீதியாக வீழ்த்தி விடலாம் என நினைத்தவர்கள் இப்போது வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம். ஆனால், நாங்கள் தொடர்ந்து எழுச்சியோடு செயல்படுவதோடு தமிழகத்தின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற நினைப்புடன் செயல்படுவோம் என்றார்.

தினகரன் எப்போது தஞ்சை வந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன் வருவது வழக்கம். ஆனால், தேர்தல் தோல்வியால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவர்கள் யாரும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை.

ABOUT THE AUTHOR

...view details