தமிழ்நாடு

tamil nadu

ஒரே நாடு ஒரே மதம் என சொல்லும் மோடி ஒரே சாதி என கூறுவாரா? - கே.எஸ்.அழகிரி காட்டம்

By

Published : Jun 29, 2023, 9:50 AM IST

இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் சரிபட்டு வராது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

ஒரே நாடு ஒரே மதம் என்க் கூறும் மோடி, ஒரே சாதி என சொல்வாரா? கே.எஸ் அழகிரி கேள்வி
ஒரே நாடு ஒரே மதம் என்க் கூறும் மோடி, ஒரே சாதி என சொல்வாரா? கே.எஸ் அழகிரி கேள்வி

ஒரே நாடு ஒரே மதம் என்க் கூறும் மோடி, ஒரே சாதி என சொல்வாரா? கே.எஸ் அழகிரி கேள்வி

தஞ்சாவூர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (ஜூன் 28) சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு வந்தார். அவரை தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “நாடு முழுவதும் ஒரே பொது சிவில் சட்டம் என்பது பன்முகத் தன்மையான பல மொழி, பல மதம், பல இனம் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்தியாவிற்கு சரியாக வராது. இது பிரச்னைகளைத்தான் உருவாக்கும்” என்று கூறினார்.

இதனால்தான் காந்தி இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை என்றார் எனவும் குறிப்பிட்டார். அதேபோல், இந்தியாவில் பல மதம், பல மொழி, பல கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு என்றும், பல மதங்களில் இந்து மதத்தில் கூட சைவம், வைணவம் என்று இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், அந்த வைணவத்திலும், கோயில் யானைக்கு எந்த விதமான நாமம் போடுவது என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை நடந்தது என்று குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே மதம் என்று சொல்லும் மோடி, ஒரே சாதி என சொல்வாரா என கேள்வி எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ், பாஜக மறைமுகமாக இதுவரை பேசி வந்த பொது சிவில் சட்டம் குறித்து தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி வெளிப்படையாக பேசியுள்ளார். இது பன்முகம் கொண்ட இந்தியாவிற்கு சரிபட்டு வராது. பிரச்னைகளைத்தான் உருவாக்கும் என்றார்.

மணிப்பூர் கலவரம்:ஆர்எஸ்எஸ் கொள்கையே மத ரீதியிலாக பிரித்தாள்வதுதான். மணிப்பூர் கலவரத்தை உருவாக்கியவர்களே பாஜகதான். மோடி நினைத்து இருந்தால் 24 மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை ஒடுக்கி இருக்க முடியும் எனவும் கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கியவர்களே பாஜகதான், மக்களிடையே பிரிவினையினை ஏற்படுத்தினால் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதன் மூலம் எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்து வேடிக்கை பார்க்கின்றனர்.

சுமார் 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட தஞ்சை மாவட்ட அளவிலான ஒரு சிறிய மாநிலத்தில், 24 மணி நேரத்தில் ஒடுக்கக் கூடிய மணிப்பூர் கலவரத்தை ஒடுக்காமல், 6 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நடைபெற்று தீப்பற்றி எரிகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கையே பிரித்தாள்வதுதான். மத ரீதியில் பிரித்து அதன் மூலம் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள்.

இதனை தொடராவிட்டால் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதனை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் இதனை பதிவு செய்கிறது என்றும் குறிப்பிட்டார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி என்பது நிச்சயம் மாறக்கூடியதுதான்.

நான் வந்தும் 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதற்கும், எனது டெல்லி பயணத்திற்கும் சம்பந்தமில்லை. இவை எல்லாம் ஊடகங்களின் கற்பனைதான் என கூறினார். தொடர்ந்து, பாஜகவை எதிர்க்க எதிர்கட்சிகளின் கூட்டணியில் மம்தா மற்றும் ஆம்ஆத்மி கருத்துக்களில் மாறுபாடு காணப்படுகிறதே என்ற கேள்விக்கு, “பல கருத்துக்கள் கொண்டவர்கள் இணைவதுதான் கூட்டணி. மேலும் அவர்கள் இருவரும் இன்னும் இந்த கூட்டணிக்கு வருவது உறுதியாகவில்லை. முதல் கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் அவ்வளவுதான்” என பதில் அளித்தார்.

இதையும் படிங்க:TNJFU: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்காலிக நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details