தமிழ்நாடு

tamil nadu

"விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஒரே அரசு திமுக தான்" - தஞ்சையில் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 11:38 AM IST

K Annamalai: உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

annamalai-speech-at-enman-en-makkal-padayatra
அண்ணாமலை பேச்சு

தஞ்சையில் அண்ணாமலை பேசிய வீடியோ

தஞ்சாவூர்:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.26). தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அண்ணாமலை வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே நிறைவு செய்தார்.

இதனையடுத்து அண்ணாமலை பேசியதாவது, "தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். பாதயாத்திரையின் 113ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கார்த்திகை தீப திருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது.

தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது. தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலக்கரி எடுப்பதை மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.

நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு உயர்த்தவில்லை. உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். தஞ்சாவூரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வழங்கி உள்ளது.

ஆனால் எந்த திட்டங்களும் தஞ்சையில் முறையாக நடைபெறவில்லை. மேலும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரின் விமான நிலையத்தில் இருந்து 20 இருக்கைகள் கொண்ட சிரிய ரக விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

எம்பி தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் பாஜக உறுப்பினரை தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன்வர வேண்டும். டெல்டா பகுதியில் குறிப்பாக எங்களுக்கு சிறப்பு கவனம் உள்ளது, காரணம் இந்தியா உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நாடாகத்தான் இருக்க வேண்டும். கையேந்த கூடிய நாடாக மாறக்கூடாது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் யார் அதிகமாக உணவு உற்பத்தி செய்யப் போகிறோம் என்று தான் போட்டி உள்ளது" என பேசினார்.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மாவட்டத் தலைவர் ஜெய்சதிஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நீலகிரியில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் பலி! காட்டெருமைகளால் அடிக்கடி உயிரிழப்புகள்! தீர்வு என்ன?

ABOUT THE AUTHOR

...view details