தமிழ்நாடு

tamil nadu

கும்பகோணத்தில் ரூ.3 கோடியே 62 லட்சத்திற்கு ஏலம்போன 3,250 குவிண்டால் பருத்தி!

By

Published : Aug 4, 2022, 7:33 PM IST

கும்பகோணம் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த 9ஆவது வார பருத்திக்கான மறைமுக ஏலத்தில் 3,250 குவிண்டால் பருத்தியானது, ரூ.3 கோடியே 62 லட்சத்திற்கு ஏலம் போனது.

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர்:கும்பகோணம் கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நடந்த 9ஆவது வார பருத்திக்கான மறைமுக ஏலத்தில் 3,250 குவிண்டால் பருத்தியானது, ரூ.3 கோடியே 62 லட்சத்திற்கு ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தஞ்சாவூர் விற்பனைக்குழு சார்பில் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஆக.4) மாலை பருத்தி மறைமுக ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மற்றும் விளம்பர, பிரசார கண்காணிப்பாளர் முன்னிலையில் நடந்தது. இதில் கும்பகோணத்தைச்சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து வரப்பட்ட மொத்தம் 2,286 லாட்களில் சராசரியாக 3,250 குவிண்டால் பருத்தி எடுத்து வரப்பட்டது. இந்த பருத்தியின் மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 62 லட்சமாகும்.

ஆண்டுதோறும், பருத்தி மறுமுக ஏலம், ஜூன் மாதம் தொடங்கி வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும். இவ்வாண்டும் இத்தகைய மறைமுக பருத்தி ஏலம் ஜூன் 08ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 15ஆம் தேதி, 22ஆம் தேதி, 29ஆம் தேதி பின்னர் ஜூலை 6ஆம் தேதி, 13ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி 27ஆம் தேதி மற்றும் ஆக.3ஆம் தேதியும் ஏலம் நடைபெற்றது.

கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், விழுப்புரம், செம்பனார்கோவில் மற்றும் ஆந்திரா, மகாராஷ்டிரா பகுதிகளைச் சார்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் விலை ரூ.11,859ஆகவும் குறைந்தபட்ச விலையாக ரூ.8,500ஆகவும் சராசரி விலையாக ரூ.11,139ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

இதையும் படிங்க:திண்டுக்கல் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

ABOUT THE AUTHOR

...view details