தமிழ்நாடு

tamil nadu

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாப பலி!

By

Published : Feb 17, 2023, 12:03 PM IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதி வயலில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

தென்காசி:கேசவபுரம் பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் குட்டைக்குள் விழுந்த விபத்தில் இயந்திரத்தின் பின்னால் இருந்த மூதாட்டியும் குட்டைக்குள் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்.17) முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் ராஜேந்திரன் என்பவர் பயிரிட்ட நெற்பயிர்களானது அறுவடை செய்யப்பட்டு வந்தன.

அப்பொழுது, நெல் அறுவடை இயந்திரமானது பின்னோக்கி வரும்போது, அந்த வயல்வெளி பகுதியிலிருந்த 10 அடி ஆழமுள்ள ஒரு குட்டையின் ஓரமாக வேம்பநல்லூர் பகுதியை சேர்ந்த மூதாட்டியான அழகம்மாள் என்பவர் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்து உள்ளார். அதை கவனிக்காத நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுனர் தொடர்ந்து இயந்திரத்தை பின்னோக்கி இயக்கி வந்ததால், மூதாட்டி அழகம்மாள் மீது நெல் அறுவடை இயந்திரம் இடித்து நெல் அறுவடை இயந்திரமும், மூதாட்டியும் குட்டைக்குள் விழுந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்த செங்கோட்டை தீயணைப்புத்துறையினர் 4 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் குட்டையில் விழுந்த நெல் அறுவடை இயந்திரத்தை மீட்டு, அதன் அடியில் சுமார் 10 அடி ஆழ குட்டையில் கிடந்த மூதாட்டி அழகம்மாளை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

தொடர்ந்து அழகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்த சூழலில், இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுனரான செங்கோட்டை கதிரவன் காலனி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details