தமிழ்நாடு

tamil nadu

காமராஜர் பிறந்தநாள்: விஜய் மக்கள் இயக்கத்தினரால் உற்சாகத்தில் திளைத்த குழந்தைகள்!

By

Published : Jul 15, 2023, 9:54 PM IST

தென்காசியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் செய்கையால் உற்சாகத்தில் திளைத்த குழந்தைகள்!
விஜய் மக்கள் இயக்கம் செய்கையால் உற்சாகத்தில் திளைத்த குழந்தைகள்!

விஜய் மக்கள் இயக்கம் செய்கையால் உற்சாகத்தில் திளைத்த குழந்தைகள்!

தென்காசி: முன்னாள் முதலமைச்சர் மற்றும் கல்விக்கண் திறந்த வள்ளலான காமராஜரின் பிறந்த நாளை ’கல்வி வளர்ச்சி தின’மாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில், இன்று காமராஜரின் 121வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பான முறையில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆலங்குளம் பகுதியில் இன்று காமராஜரின் திரு உருவச் சிலையானது பேருந்து நிலையம் எதிரில் உள்ள பகுதியில் நிறுவப்பட்டது.

இதையும் படிங்க: வட மாநிலங்களில் கனமழை எதிரொலி:தமிழ்நாட்டில் 75 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்!

தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காங்கிரஸ், திமுக மற்றும் அனைத்து கட்சியின் சார்பாகக் காமராஜரின் பிறந்த நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி இன்று அனைத்து பள்ளிகளும் முழுமையாகச் செயல்பட்டது.

இதன் காரணமாக அனைத்து கட்சி உறுப்பினர்களும் தொண்டர்களும் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் காமராஜரைப் போல வேடம் அணிந்து வந்து அசத்தினார்.

இதில் ஒரு பகுதியாக இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சிறப்பான முறையில் பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவையான பென்சில், நோட்டு, பேனா உள்ளிட்ட பொருட்களை நேரில் சென்று வழங்கப்பட்டது. இயக்கத்தின் தொண்டர்கள், உறுப்பினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் சென்று நேரடியாக வழங்கிய செயல் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனைக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு பெற்றுச்சென்றனர்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் விஜய் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்குப் பேனா, நோட்டு, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர்கள் வழங்கினர்.

இதையும் படிங்க: Madurai Library: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details