தமிழ்நாடு

tamil nadu

ஈபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளரா? - ஓபிஎஸ் அணி அதிருப்தி

By

Published : Dec 30, 2022, 6:13 PM IST

'அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி' எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்த மத்திய சட்ட அமைச்சகத்தின் கடிதத்தை திரும்பப்பெறுமாறு தென்காசி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஈபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளரா? - ஓபிஎஸ் அணி அதிருப்தி

தென்காசி:மத்திய சட்ட அமைச்சகம் அதிமுக தலைமை கழகத்திற்கு அனுப்பி இருந்த ஒரு கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் அதற்கு பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அந்த கடிதத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் கோரிக்கை வைத்து வரும் சூழலில், இன்று (டிச.30) ஓபிஎஸ் அணியின் அதிமுக தென்காசி வடக்கு மாவட்டச்செயலாளர் மூர்த்தி பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என மத்திய சட்ட அமைச்சகம் எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்த கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும். அதிமுக என்றைக்குமே ஒற்றுமையாகத் தான் உள்ளது. சிலர்தான் அதிமுகவில் ஒரு சில கலகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எங்களது மாவட்ட கழகம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது - பிரதமர் மோடி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details