தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் கார் விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

By

Published : Apr 21, 2020, 10:25 AM IST

தென்காசி: சாலையில் நடந்துச் சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி கார் விபத்து  கார் விபத்து  Tenkasi Car Accident  Car Accident  TamilNadu Car Accident  தமிழ்நாடு கார் விபத்து
Car Accident

தென்காசி மாவட்டம் கழுநீர் குளம் பகுதியில் உள்ள சாலையில் இளைஞர்கள் மூவர் இன்று காலை நடந்து சென்றுள்ளனர். அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற மூவர் மீதும் மோதியது.

இதில், அவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக வி.கே. புதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய கார்

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலையில் நடந்துச் சென்ற மூவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாய் இருந்த மகன் கொலை: தாய் கைது!

ABOUT THE AUTHOR

...view details