தமிழ்நாடு

tamil nadu

"டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நிரந்தரமாக மூட வேண்டும்" - புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 4:45 PM IST

Tasmac shops issue: தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tasmac shops issue
"டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்" - புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கோரிக்கை

தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "கிராமசபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மேலும் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்தந்த பகுதியினுடைய ஊராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பொது மக்களை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திமுக, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பேசி சட்ட ரீதியாக, காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும். தமிழக முதலமைச்சர் கூட்டணியை மனதில் வைத்துக் கொண்டு, தமிழகத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. பாஜக - அதிமுக கூட்டணி விரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பக்கூடிய சூழலில், இந்த வகையான விரிசல் என்பது ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு கட்சிகளுமே நீண்ட தூரம் விலகிச் சென்றுவிட்டனர். அந்த வகையில் மீண்டும் இவர்களை இணைக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தளவில் அதிகப்படியான கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்.

இந்த கனிம வளத்தை நிறுத்த கூறி புதிய தமிழகம் கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்கக் கூடாது. செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில் பக்தர்களின் வசதிக்காக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

தெற்கு ரயில்வே இதனைக் கண்டு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் நோயாளிக்கு தையல் பட்ட விவகாரம் பூதகரமான நிலையில், இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் விளம்பரத்திற்காக மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளாமல் சங்கரன்கோவிலில் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இஸ்ரோ தமிழக விஞ்ஞானிகள் பெயரில் உதவித் தொகை" முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details