தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி

By

Published : Oct 19, 2022, 9:52 PM IST

தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புகைப்பட கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி
தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி

தென்காசி:அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் இன்று(அக்.19) துவங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. புகைப்பட கண்காட்சியைத் தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விழாவிற்கு மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய மக்கள் தொடர்பகம், விளம்பரம் அலுவலர் ஜூலி வரவேற்று பேசினார். மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் காமராஜ் கண்காட்சியின் நோக்கம் குறித்துப் பேசினார்.

விழாவின் முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய மக்கள் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாத்துரை செய்தியாளர்களிடம் பேட்டியின்போது கூறியதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து நாடு முழுவதும் சுதந்திர தின அமிர்த பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

தென்காசியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்துக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளைப் பாளையங்கோட்டை , தஞ்சாவூரில் நடத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வேலூர், ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் நடத்தப்பட இருக்கிறது.

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த புதிதாக 30க்கும் மேற்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் சுமார் 160க்கும் மேற்பட்ட படங்கள் இடம் பெற்றுள்ளது.

3 நாட்கள் தென்காசியில் நடைபெறும் இந்த கண்காட்சியைப் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பார்த்துப் பயன்பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்குப் பிறகு அளித்த பாலியல் புகார் - சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து

ABOUT THE AUTHOR

...view details