தமிழ்நாடு

tamil nadu

குளு குளு குற்றாலம்...சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

By

Published : May 16, 2022, 12:31 PM IST

தென்காசி சுற்றுவட்டாரத்தில் பெய்துவரும் மழையால் குற்றாலஅருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குளு குளு குற்றாலம்...சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
குளு குளு குற்றாலம்...சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசியில் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு கோடை கால வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்துவருகிறது.

இந்நிலையில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நேற்றிரவு முதல் பெய்த மழையால் குற்றாலத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நீர் வரத்தொடங்கியது.

ஜூன் மாதத்தில் தொடங்கும் சீசன் சற்று முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குற்றால வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குளு குளு குற்றாலம்...சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பேரருவியில் பாதுகாப்பு வளையத்திற்கு உள் பகுதியிலும், ஐந்தருவியில் நான்கு கிளைகளிலும் நீர் சீராக விழுகிறது. தொடர்ந்து தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான வெயிலும், மெல்லிய சாரல் மழையும் பெய்துவருகிறது.

மேலும் இன்று(மே 16) விடுமுறை என்பதால் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதையும் படிங்க: 'நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 3 பேரின் கதி என்ன?'

ABOUT THE AUTHOR

...view details