தமிழ்நாடு

tamil nadu

சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

By

Published : Sep 7, 2020, 4:57 PM IST

தென்காசி: சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வழங்கி கௌரவித்தார்.

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது தமிழ்நாடு முதலமைச்சரால் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கரோனா தொற்று நோய்ப் பரவல் காரணமாக, ஆசிரியர் தின விழா சென்னையில் நடைபெறவில்லை. இதற்குப் பதிலாக அந்தந்த மாவட்ட ஆட்சியர், தலைவர்கள் ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருதை வழங்குகின்றனர்.

அதன்படி இன்று(செப்.07) தென்காசி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஆறுமுகசாமி, ரமேஷ், மரியசூசை மற்றும் சுசிலா ஆகிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்பசாமி, மற்றும் ஆசிரியர்க,ள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details