தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை!

By

Published : Dec 16, 2020, 8:34 AM IST

தென்காசி: ஆலங்குளம் அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை  தென்காசி மாவட்ட செய்திகள்  தமிழ்நாடு தற்போதைய செய்திகள்  தமிழ்நாடு குற்றச் செய்திகள்  A Auto Driver Murdered In Thenkasi  Tenkasi District News  Tamil Nadu Current News  Tamil Nadu Crime News  ஆட்டோ ஓட்டுநர் கொலை  Auto Driver Murder
A Auto Driver Murder

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் இசக்கித்துரை (37). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார். இவருக்குத் திருமணமாகி சொர்ணமதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

நேற்று மாலை (டிச.15) இசக்கித்துரை வீட்டில் இருந்தபோது ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து சவாரிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து, அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு ரெட்டியார்பட்டி ஊத்துமலை சாலையில் ஆட்டோவில் வந்தார். அப்போது, அந்த நபர் நண்பர் ஒருவரை ஆட்டோவில் ஏற்றிச் செல்ல வேண்டும், ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

இதனால், இசக்கித்துரை ஆட்டோவை ஓரமாக நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்ட முயன்றது. இதைச் சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து தப்பி தெருவில் உள்ள ஒரு புதிய கட்டடத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கு புகுந்த அந்தக் கும்பல் இசக்கித்துரையை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஊத்துமலை காவல் துறையினர் இசக்கித்துரையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் கொலைசெய்யப்பட்டாரா? தொழில் போட்டியின் காரணமாக கொலைநடைபெற்றதா? இல்லை வேறு காரணமா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

தப்பியோடிய கும்பலைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். ரெட்டியார்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர் கொலை: குற்றவாளிகளுக்கு வலை!

ABOUT THE AUTHOR

...view details