தமிழ்நாடு

tamil nadu

மான் வேட்டைக்குச் சென்ற மூவருக்கு 60,000 அபராதம்!

By

Published : Aug 28, 2020, 10:50 AM IST

தென்காசி: சிவகிரி அருகே வனப்பகுதிக்குள் மான் வேட்டைக்குச் சென்ற மூன்று பேரை பிடித்த வனத் துறையினர், அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

arrest
arrest

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் மான், மிளா, கரடி, காட்டு எருமை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் உள்ளன.

இந்த வனப்பகுதிக்குள் குறிப்பாக தேவியாறு பீட்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காட்டுக்குள் ரோந்து சென்ற வனத் துறையினர், சம்பந்தமில்லாமல் காட்டிற்குள் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த பேச்சிராஜா, ஆனந்தகுமார், கணேசன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாட வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த நெற்றி டார்ச் லைட், பேட்டரி, ஒலி எழுப்பும் கருவி ஆகியவற்றை வனத் துறையினர் பறிமுதல்செய்தனர்.

வேட்டையாட முயன்றதற்காக 3 பேருக்கும் தலா 20,000 வீதம் 60,000 ரூபாய் அபராதம் விதித்து வனத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வனப்பகுதிக்குள் வருபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோயம்பேடு காய்கறி சந்தை செப் 28 இல் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details