தமிழ்நாடு

tamil nadu

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jan 13, 2021, 10:51 PM IST

சிவகங்கை: காரைக்குடி செக்காலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

accident
accident

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வியாபாரி காசி (60) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் செக்காலை எனும் இடத்தில் சென்ற போது, எதிரே வந்த தினேஷ்குமார் (28) என்ற இளைஞரின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வியாபாரி காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

accident

இரண்டு வாகனங்களும் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரியும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காசியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடல்கூராய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details