தமிழ்நாடு

tamil nadu

சிவகங்கை காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றம்!

By

Published : May 13, 2021, 10:36 AM IST

சிவகங்கை: நேரு பஜாரில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை நேற்று (மே.12) முதல் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றம்!
சிவகங்கை காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நண்பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகச் நகராட்சியின் இடத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் இறைச்சி சந்தை தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பேருந்து நிலையத்தில் சந்தை நடைபெற்றது. இதில் 50 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், வரி வரும் வழிகள் அல்ல - கமல் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details