தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

By

Published : Mar 9, 2022, 8:32 AM IST

தமிழ்நாடு அரசு விவாயிகளை வஞ்சிப்பதாக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு, PR pandiyan SAYS Tamil Nadu government is cheating farmers
தமிழ்நாடு அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு PR pandiyan SAYS Tamil Nadu government is cheating farmers

சிவகங்கை: முல்லைப் பெரியாறு நீரை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி சிவகங்கை, மதுரை, தேனி வரை அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.ஆர் பாண்டியன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாகச் சிவகங்கை அரண்மனை வாசல் முன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "முல்லைப் பெரியாறு பிரச்சனை தீவிரம் அடைந்து வருகிறது. முல்லைப் பெரியாறு, வைகை அணை நீரை நம்பி மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் மக்களுக்குக் குடிநீராகவும் மற்றும் நஞ்சை, புஞ்சை விளைநிலங்களும் பாசனம் பெற்று வருகின்றனர்.

மார்ச் 15 தேதி மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

கேரளா அரசு நமக்கான பாசன உரிமையைத் தடுத்து மின்சாரம் தயார் செய்து விற்பனை செய்வதற்காக வணிக நோக்கத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீரைப் பயன்படுத்த புதிய அணை கட்ட முயன்று வருகிறது. வரும் மார்ச் 15-ம் தேதி மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழ்நாடு அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. தேர்தல் வாக்குறுதி என்பது நெல் குண்டால் ஒன்றுக்கு 2,500 வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் அதனைப் பற்றி வாய் திறக்காமல் இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை தரமாக உள்ளது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிக்கிறார். ஆனால், மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என இரட்டை வேடம் போடுகிறார்.

கேரளா மாநில ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் புதிய அணை கட்டுவேன் என்று தன்னிச்சை போக்கோடு ஆளுநர் உரையில் தெரிவிக்கிறார். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு கேரளா ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கருவேலங்காடுகளாகக் காட்சியளிக்கிறது.

தமிழ்நாடு, கேரளா அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

இந்த மாவட்டங்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புக் கவனம் செலுத்தி கருவேலமரங்களை அகற்றி விட்டு மனிதர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை மீட்பதோடு வைகை அணையைத் தூர்வாரி மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பரப்புரை மேற்கொண்டு உள்ளோம்.

விவசாயத்திற்குத் தனி பட்ஜெட் அறிவிப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த பிஆர் பாண்டியன் அதற்கு முன்னதாக விவசாயத்தை வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக மாற்றுவதற்கு அடிப்படைத் திட்டங்கள் தேவை இருக்கிறது. விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கதறுவதாகவும் கொள்முதலில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகவும் இவற்றுக்கெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு ஏற்கவேண்டும்.

காவிரி முல்லைப் பெரியாறு அணை களை பறிகொடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில் தான் இந்த பரப்புரையை மேற்கொண்டு உள்ளோம். தமிழ்நாடு அரசு 2500 நெல்லுக்கு விலை கொடுப்பதாகக் கூறித்தான் வாக்கு கேட்டது, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும் இது குறித்து வாய் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது". தமிழ்நாடு அரசு வரி கட்டிக் குத்தகை எடுத்துள்ள காவிரி முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு சுற்றுலாத் தலமாக தங்கும் விடுதிகள் சொகுசு பங்களாக்கள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை நிலைநாட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வருகிற மார்ச்-18இல் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details