தமிழ்நாடு

tamil nadu

சிவகங்கையில் இளைஞர் படுகொலை... தலையை எடுத்துச்சென்ற கொலையாளிகள்

By

Published : Dec 2, 2022, 6:44 PM IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்து, கொல்லப்பட்டவரின் தலையை கிணற்றில் இருந்து காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

சிவகங்கையில் இளைஞர் படுகொலை
சிவகங்கையில் இளைஞர் படுகொலை

சிவகங்கை: மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த செந்திவேல் மகன் ராம்(27). இவர் நேற்று முன்தினம் இரவு அலைபேசிக்கு வந்த அழைப்பை அடுத்து, தனது வீட்டிலிருந்து அருகில் இருந்த கண்மாய்க்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால் அவரது அண்ணன் சரத் கண்மாய்க்கு சென்று ராமை தேடியுள்ளார்.

அங்கு ஒரு சிலர் ‌ராமுவை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை மட்டும் கண்மாய்க்குள் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிவகங்கையில் இளைஞர் படுகொலை

அதுமட்டும் இன்றி நேற்று காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ராமுவின் தலையைத் தேடி வந்தனர். இந்நிலையில், தற்போது ராமுவின் தலையை பள்ளமிட்டான் கிராமத்தில் காட்டுக்குள் இருந்த கிணற்றில் இருந்து, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உதவியுடன் மானாமதுரை காவல்துறையினர் மீட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வடக்கூர் கிராமத்தைச்சேர்ந்த பிரபாகரன் மற்றும் பாலமுருகன் ஆகியோரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். பிரபாகரன் என்பவர் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ராமு காவல்துறையினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததால் அவரை கொன்றதாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:இளைஞர் வெட்டி படுகொலை... கண்மாயில் தலையை தேடும் போலீஸ்; சிவகங்கையில் கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details