தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் சமரசத்திற்கு வந்தால் நல்லது - கார்த்தி சிதம்பரம்

By

Published : Jan 26, 2023, 5:27 PM IST

ஆளும் கட்சியுடன் ஆளுநர் சமரசத்திற்கு வந்தால் நல்லது; மேலும் அவர் தனது ஆதிக்கத்தை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

ஆளுநர் சமரசத்திற்கு வந்தால் நல்லது- கார்த்திக் ப.சிதம்பரம்
ஆளுநர் சமரசத்திற்கு வந்தால் நல்லது- கார்த்திக் ப.சிதம்பரம்

ஆளுநர் சமரசத்திற்கு வந்தால் நல்லது - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை:காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியபோது, 'ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், பதிவான வாக்குகளில் 65 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் கட்சி உறுதியாக பெறும்.

மேலும், கமல்ஹாசனின் அரசியல் சிந்தனை காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தே உள்ளது. அவர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரிப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், சீட் ஒதுக்குவது திமுக கையில் தான் உள்ளது. மேலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி மாபெரும் வெற்றியினை பெறும் என்ற யதார்த்த உண்மையை அண்ணாமலை தெரிந்திருக்கிறார். கார்த்தி சிதம்பரம், ஆளும் கட்சியுடன் ஆளுநர் சமரசத்திற்கு வந்தால் நல்லது. அதனை நான் வரவேற்கிறேன்.

ஆனால், ஆளுநர் தனது ஆதிக்கத்தை குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம். கொலை, கொள்ளை சம்பவம் லாப நோக்கத்திற்காக நடைபெறுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறுவது தவறு’ என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?

ABOUT THE AUTHOR

...view details