தமிழ்நாடு

tamil nadu

விதிமுறைகளை மீறியதாக கூறி அபராதம்: இளைஞர் தற்கொலை முயற்சி

By

Published : Sep 12, 2020, 8:54 PM IST

சேலம்: விதிமுறைகளை மீறியதாக கூறி அலுவலர்கள் அபராதம் விதித்த நிலையில், ஹோட்டல் நடத்தி வந்த இளைஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

சேலம் அருகே அயோத்தியாபட்டணம் பகுதியில் பிரதீப் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். உணவகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். இதனால் உணவக உரிமையாளர் பிரதீப், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டனர். பின்னர், இது குறித்து சேலம் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details