தமிழ்நாடு

tamil nadu

சேலம் மனநல மருத்துவர் மீது தாக்குதல்: தமிழ்நாடு மனநல மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 9:03 PM IST

சேலத்தில் மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர் குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனநிலை மருத்துவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat

சேலம் மனநல மருத்துவர் மீது தாக்குதல்;தமிழ்நாடு மனநல மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

சேலம்: சேலம் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த மனநல மருத்துவரான பாஸ்கர் என்பவர் தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 1999ஆம் ஆண்டு மனநல சிறப்புச் சிகிச்சை நிபுணராகப் பட்டம் பெற்றுக் கடந்த 25 ஆண்டுகளாகப் பல்லாயிரம் மனநல நோயாளிகளுக்கு மனநல மருத்துவ சேவை செய்துள்ளார்.

இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மனநல மருத்துவர் பாஸ்கர், சிகிச்சை மையம் வைத்து நடத்திவருகிறார். கடந்த 12ஆம் தேதி மருத்துவ ஆலோசனைக்காக வந்த மேட்டூர் சேர்ந்த கௌதம் என்பவர் மருத்துவர் பாஸ்கரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால், பலத்த காயங்களுடன் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விவகாரத்தில், தாக்குதல் நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில், பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மனநல மருத்துவர் சங்கத்தின் உறுப்பினரான பாஸ்கர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது உரியச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மனநல மருத்துவர் சங்கம் சார்பில், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (டிச.15) மனு அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வன், 'மனநல மருத்துவ பாஸ்கர் மீது தாக்கிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அங்கீகரிக்கும் பட்சத்தில், அந்த நபருக்குத் தேவையான மனநல சிகிச்சை வழங்க மனநிலை மருத்துவ உறுப்பினர்களால், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதிப்படத் தெரிவிக்கும் என்று கூறினார்.

இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான சம்பவங்கள், தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதால் மருத்துவர் பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி உரியச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மருத்துவர் மீது சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்களைத் தடுப்பதற்கு இன்றியமையாதது என்று தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம் தீர்மானமாகத் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மனநல மருத்துவரிடம் மனநல மருத்துவ ஆலோசனைக்காக வரக்கூடிய நபர்கள் தங்களின் மனநல பிரச்சனை தாக்குதல் விளைவிக்கக்கூடிய அசம்பாவிதங்களை, மனநல மருத்துவர்கள் எதிர்கொள்கின்றனர். அவற்றை நேர்மறையாக அணுகி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளையும், இதர உதவிகளையும் மனநல மருத்துவர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

ஆகவே, இத்தகைய சேவைகளைச் செய்துவரும் அனைத்து மருத்துவர்கள் மீது அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமெனவும், அரசு இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தோனி Vs ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார்! ரூ.100 கோடி எங்க போச்சு? முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details