தமிழ்நாடு

tamil nadu

தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்!

By

Published : Nov 2, 2020, 3:41 PM IST

சேலம்: தெற்கு ரயில்வேயின் சேலம் பிரிவின் வணிக மேம்பாட்டுப் பிரிவு எப்போதும் வணிக நடவடிக்கைகளைத் தக்கவைத்து மேம்படுத்துவதற்கான முயற்சியில் உள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வே புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சேலம் ரயில் பிரிவு
சேலம் ரயில் பிரிவு

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வரருக்கு கடந்த அக். 26ஆம் தேதி அன்று கரூரிலிருந்து மருந்து கொசு வலைகள் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டதில் 47.8 லட்சம் ரூபாய் தெற்கு ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தது.

இத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சியாக, நேற்று (நவ. 01) சேலம் பிரிவு வணிக நடவடிக்கைகளின் மூலமாக, மருந்து கொசு வலைகளை கரூரிலிருந்து ஒடிசாவின் குர்தா சாலைக்கு ரயில் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.

24 பார்சல் வேன்களில் ஏற்றப்பட்டு 532 டன் எடையுள்ள இந்தக் கொசு வலைகள் கரூரிலிருந்து ஒடிசாவின் குர்தா சாலைக்கு மாற்றப்படுகின்றன.

கரூரிலிருந்து குர்தா சாலைக்கு கொசு வலைகளை கொண்டு செல்வதால் ரூ. 21.09 லட்சம் வருவாய் கிடைக்கும்.

மேலும் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, தெற்கு ரயில்வே 2.09 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச்சென்றது. இதனால் 162.42 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஏப்ரல் முதல் அக்டோபர் 20 வரையிலான நிதியாண்டில், தெற்கு ரயில்வேயின் வருமானம் 1,77.57 கோடி ஆகும்.

ரயில்களில் பல்வேறு பொருள்கள் ஏற்றப்பட்டாலும், கடந்த அக்டோபர் மாதத்தில் சில விதிவிலக்குகள் இருந்தன. முதலாவது, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு (டி.என்.சி.எஸ்.சி) ஒரே மாதத்தில் மிக அதிக அரிசி மற்றும் நெல் ஏற்றப்பட்டது.

உரங்கள், உணவு தானியங்கள், சிமெண்ட், இரும்பு, எஃகு, நிலக்கரி போன்ற பல அத்தியாவசிய பொருள்களை ரயில்கள் மூலம் கொண்டுசெல்வதே சிறந்ததாக அமைந்துள்ளது. சரக்கு ரயில்களின் அதிக வேகம், தெற்கு ரயில்வே முனையங்களில் விரைவான, திறமையான இறக்குதலின் ஒருங்கிணைந்த விளைவு, தெற்கு ரயில்வேக்கு மட்டுமல்லாமல், இந்திய ரயில்வேக்கும் ஏற்றுவதற்கான வேகன்களின் கிடைப்பை மேம்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details