தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்..கையும் களவுமாக பிடிபட்ட 2 பேர் கைது

By

Published : Feb 7, 2023, 11:28 AM IST

Updated : Feb 7, 2023, 11:48 AM IST

சேலத்தில் பத்திரப்பதிவுக்காக ரூ.50 ஆயிரம் பெற்ற இடைத்தரகர், சார் பதிவாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

சேலம்:பத்திர பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல்(38). இவரின் தாயின் பெயரில் உள்ள நிலத்தை, பழனிவேலுக்கு தான செட்டில்மெண்ட் செய்வதற்காக, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்திற்கு பழனிவேல் சென்றுள்ளார்.

அப்போது இடைத்தரகர் கண்ணன் என்பவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், சார் பதிவாளர் மூலம் தான செட்டில்மெண்ட் உடனடியாக செய்து தருவதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிவேல், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரசாயனம் தடவிய பணத்தை பழனிவேலிடம் கொடுத்து, இடைத்தரகர் கண்ணனிடம் வழங்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று (பிப்.6) மாலை இடைத்தரகர் கண்ணனிடம், பழனிவேல் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அந்த பணத்தைப் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கண்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படங்கள்

மேற்படி இது தொடர்பாக, சார் பதிவாளர் செல்வபாண்டியையும் போலீசார் கைது செய்தனர். பத்திரப்பதிவு செய்ய ரூ.50 லஞ்சம் வாங்கியவர்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்த இச்சம்பவம் சேலம் சார் பதிவாளர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது... பீகாரில் இருந்து கடத்தி தமிழகத்தில் விற்பனை!

Last Updated : Feb 7, 2023, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details