தமிழ்நாடு

tamil nadu

’வெறும் 25 விழுக்காடுதான் விற்பனையானது’ - புலம்பும் மாம்பழ வியாபாரிகள்

By

Published : Jun 10, 2020, 9:54 PM IST

மாம்பழ சீசன் முடிவடையும் தருவாய் ஆனபோதும் வெறும் 25 விழுக்காடு மாம்பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.0

’இந்தாண்டு மாம்பழ விற்பனை வெறும் 25 விழுக்காடுதான்’: புலம்பும் விவசாயிகள்!
’இந்தாண்டு மாம்பழ விற்பனை வெறும் 25 விழுக்காடுதான்’: புலம்பும் விவசாயிகள்!

மாம்பழங்கள் என்றாலே, சேலம்தான் நினைவுக்குவரும். ஆனால் அதை விளைவிக்கும் விவசாயிகள் குறித்து என்றாவது நினைத்திருக்கிறோமா?. மாம்பழம் உற்பத்தியில் மட்டுமில்லை, அனைத்து பயிர் விவசாயிகளையுமே இந்தாண்டு கசப்பான நினைவுகளால் மட்டுமே சூழப்பட்டுள்ளனர். மாம்பழங்கள் அதிகமாக விளைந்திருந்தாலும் அதன் வர்த்தகம் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டிலும் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கும் மாம்பழ அறுவடையும், வணிகமும் சேலத்தில் கொடிகட்டி பறக்கும். சேலத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் திரும்பிய பக்கமெல்லாம் சேலத்து மாம்பழங்களின் விற்பனை களைகட்டும். நடு சாலை ,பெங்களூரா ,மல்கோவா, இமாம்பசந்த், குண்டு மாம்பழம் என பல வகை மாம்பழங்கள் கோடைகாலத்தில் வாடிக்கையாளர்களை கவரும்.

இந்தாண்டு சேலத்தில் எங்கும் மாம்பழ விற்பனையை அதிகமாக காண முடியவில்லை. செவ்வாய்ப்பேட்டை, குகை, கோர்ட் ரோடு, அஸ்தம்பட்டி என ஒரு சில இடங்களில் மட்டுமே அரசு அளித்துள்ள ஊரடங்கு தளர்வு நேரத்தில் தள்ளுவண்டிகளில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் மாம்பழ குடோன்கள் தற்காலிகமாக இயங்கிவருகின்றன . இவற்றில் மாம்பழ பிரியர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான மாம்பழங்களை வாங்கிசெல்கின்றனர்.

மாம்பழம் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்கினாலும்கூட, கரோனா நெருக்கடிக்கு மத்தியில் மாம்பழங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதேபோல மாம்பழங்கள் கொள்முதல் செய்வதும் வெகுவாகக் குறைந்தது, கடந்தாண்டு கிடைத்த லாபத்தில் கால் பங்குகூட கிடைக்காதபடி செய்துவிட்டது.

’வெறும் 25 விழுக்காடுதான் மாம்பழம் விற்பனையானது’: புலம்பும் மாம்பழ வியாபாரிகள்!

இந்த ஆண்டு மூன்றில் ஒரு பகுதி அளவே மாம்பழங்களை விளைச்சல் செய்தது விவசாயிகளின் மறைக்கப்பட்ட துயரம். சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மாம்பழங்கள் தமிழ்நாடுமட்டுமல்லாது வட இந்திய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் கரோனாவின் ஏற்றுமதி முற்றிலும் சறுக்கலான நிலையைச் சந்தித்தது.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, இந்தாண்டு நிலவிய மாறுபட்ட சீதோஷ்ண பருவநிலை காரணமாக மாம்பழ சீசன் காலத்தில் அதிகளவில் விளைச்சல் இல்லை. ஊரடங்கு, கரோனாவினால் விற்பனையும் இல்லை. மாம்பழங்கள் வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்கள் கிடைத்தபோதிலும், விநியோகம் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. மாம்பழ சீசன் ஏறத்தாழ முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு மாம்பழ விற்பனை 75 விழுக்காடு இழப்பினைச் சந்தித்திருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: சட்ட நகலை எரிக்கலாமா? விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details