தமிழ்நாடு

tamil nadu

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் பள்ளி முதல்வர் ஈடுபட்டதாக புகார்

By

Published : Jun 7, 2022, 9:30 AM IST

தனியார் பள்ளியின் முதல்வர், மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனியார் பள்ளி முதல்வர் - கல்வித்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை!
மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனியார் பள்ளி முதல்வர் - கல்வித்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை!

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் முதல்வராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றும் நபர் ஒருவர், பள்ளியில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து வருகிறார் எனக் புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் மாணவிகளுக்கு மொபைல் போனிலும், பகலில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளிடம் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களையும் செய்துவருகிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனியார் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதனை, சக மாணவர்கள் பள்ளியின் முதல்வரிடம் நேரில் சென்று, தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது எழுந்த பிரச்சினையை அடுத்து, பள்ளியின் நிர்வாகத்தினரால் தாரமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பள்ளி முதல்வரின் இந்த நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு நேரில் வந்து மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகின்றனர். இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் எனவும் மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண் காவலரிடம் ஆபாசமாகப்பேசி தகராறு - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details