தமிழ்நாடு

tamil nadu

காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு!

By

Published : Dec 4, 2022, 4:03 PM IST

கோவையில் இருந்து காசிக்கு செல்லும் ’காசி தமிழ் சங்கமம்’ சிறப்பு ரயிலுக்கு சேலத்தில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Kashi
Kashi

சேலம்: தமிழ்நாட்டிற்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசிக்கும் இடையிலான கலாச்சார உறவை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் "காசி தமிழ்ச் சங்கமம்" நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசு ஏற்பாட்டில், ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்று(டிச.4) கோவையிலிருந்து சேலம் வழியாகக் காசிக்குச் சிறப்பு ரயில் புறப்பட்டது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தை அடைந்த ரயிலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்டத்திலிருந்து காசி தமிழ்ச் சங்கமத்திற்கு ஏற்கனவே இரு குழுக்கள் சென்ற நிலையில், மூன்றாவது குழுவினர் இந்த ரயிலில் காசிக்குப் புறப்பட்டனர்.

சேலத்தைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 57 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரயிலில் அனுப்பப்பட்டனர். பன்னீர் தெளித்தும், மலர்கள் தூவியும் உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் ரயிலை மறிக்க முயற்சி ? : போலீஸ் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details