தமிழ்நாடு

tamil nadu

சேலம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' திறப்பு!

By

Published : Jun 23, 2023, 11:00 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

natarajan cricket stadium
நடராஜன் கிரிக்கெட் மைதானம்

நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு

சேலம்:சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன்.இவர்,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி தனக்கென்று ரசிகர்களை ஈர்த்தவர்.கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது அப்போது இந்திய கிரிக்கெட் அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பிடித்தார் நடராஜன்.

மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் சிலர் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, அதே தொடரில் இடம் பெற்றிருந்தார் நடராஜன் மேலும் டெஸ்ட் ,ஒருநாள் போட்டி மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்றுச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அப்போது ரசிகர்கள் மத்தியில் நடராஜனின் பந்து வீச்சில் யார்க்கர்கள் பெரிதும் பேசப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர்,அந்த போட்டியில் மார்னல் லபுசேனை ஆட்டமிழக்கச் செய்து, தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி விக்கெட்டை எடுத்தார். இப்போட்டியில் இவர் இரண்டு விக்கெட்டுகளை பெற்றார்.மேலும்,முதல் சர்வதேச டி-20 அறிமுக போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி, 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜனின் அசத்தல் ஆட்டம், இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.இதனையடுத்து தான் உருவாக்கும் கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களை அதிகம் பயிற்சி பெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இதற்காக நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

நடராஜன் உருவாக்கியுள்ள இந்த மைதானத்தில், நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம் மற்றும் கேண்டீன் என 100 பார்வையாளர்கள் அமரக்கூடிய ஒரு மினி கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. சின்னப்பம்பட்டி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானம் முழுமையாகத் தயாராகிவிட்ட நிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து மைதானத்திற்கு சென்று பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிட்ச் அமைக்கப்பட்ட விதத்தையும் பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகிபாபு, புகழ்,சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவர் அசோக் சிகாமணி,செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.. கடுப்பான மாஜி அமைச்சர்.. கரூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details