தமிழ்நாடு

tamil nadu

Without Mask Fine in Salem: முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம்!

By

Published : Jan 4, 2022, 9:44 PM IST

Without Mask Fine in Salem: சேலம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம்
முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம்

Without Mask Fine in Salem: சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் ஐந்து சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "உலகளாவிய கோவிட் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல்வேறு கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்திவருகிறார்.

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றி தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகின்றது.

முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம்

முகக்கவசம் அணிவது முக்கியத்துவம்

இன்றைய தினம் பேருந்து நிலையம், ஐந்து சாலை பகுதி, வட்டார தலைமையிடங்கள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், வருவாய், மருத்துவம், காவல், போக்குவரத்து உள்ளிட்ட துறையினரைக் கொண்டு இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை ஆய்வுசெய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

முகக்கவசம் கோவிட் தடுப்பிற்கான கேடயமாக விளங்குவதால் இன்றைய ஆய்வின்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படுகிறது.

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

ஆனால் நாளைய தினம் முதல் கட்டாயம் முகக்கவசம் அணியாதவர்களிடம் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ளவாறு அபராதம் விதிக்கப்படுவதைக் கடுமையாக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று பேருந்து ஓட்டுநர், நடத்துநர், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வாகனங்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிவதும், தங்கள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளதையும் உறுதிசெய்து-கொள்ள வேண்டும்.

கூட்டங்களைக் கூட்டக் கூடாது

கடைகளில் கண்டிப்பாக கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல், தெர்மல் கருவி கொண்டு கண்காணித்தல் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். தற்போது கோவிட் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அதிகமான கூட்டங்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.

குறிப்பாக, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. கோவிட் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிப்பதை அரசு அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுமேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:Rowdy Baby Surya Arrest: ரவுடி பேபி சூர்யா கைது

ABOUT THE AUTHOR

...view details