தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!

By

Published : Oct 31, 2021, 7:06 PM IST

தீபாவளி பண்டிகைக்கு புதிய ரகமாக 'அண்ணாத்த சேலைகள்' அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த சேலை
அண்ணாத்த சேலை

சேலம்:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், கடைத்தெருக்களில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். சேலம் மாநகர பகுதியில் உள்ள அக்ரஹார தெருக்களில் ஜவுளி கடைகளில் புத்தாடை வாங்க ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

இந்தாண்டு தீபாவளிக்கு புதிய ரகமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் பெயரில் 'அண்ணாத்த சேலைகள்' விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சேலைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தீபாவளி பண்டிகை

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்த போதிலும் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வாங்கி செல்கின்றனர். மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக கடைத்தெருக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாத்த சேலை

கடந்தாண்டு கரோனா பரவலால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியவில்லை. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பண்டிகையை கொண்டாட பொருட்கள் வாங்கி செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை

இதையும் படிங்க: சுகாதாரத்துறைக்கு அடுத்த 2 மாதம் சவாலானது - ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details