தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் 4 பொறியாளர்கள் மீது முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு

By

Published : Jul 22, 2021, 10:30 PM IST

குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, 4 பொறியாளர்கள் மீது 6 பிரிவுகளின்கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு

சேலம்: சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரியத்தில் ரவிக்குமார், ஜெயந்திமாலா, சரவணன், சீனிவாசன் ஆகியோர் பொறியாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுகளில், ரூ. 14 லட்சத்து 70 ஆயிரம் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் ஏற்கெனவே கான்கிரீட் வீடுள்ளவர்களுக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதனையடுத்து நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தோனேசியாவில் 18 படகுகளைப் பந்தாடிய புயல்... 24 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details