தமிழ்நாடு

tamil nadu

சத்து மாத்திரை அதிமாக சாப்பிட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

By

Published : Mar 10, 2023, 7:13 PM IST

ஊட்டியில் சத்துமாத்திரை அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சேலம்:நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் ஊட்டச்சத்துகள் கொண்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஒருவருக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட்ட நிலையில் அந்த பள்ளி மாணவிகள் சிலருக்கு கூடுதலாக மாத்திரைகள் கிடைத்துள்ளன. அப்போது, யார் அதிகமாக மாத்திரை உட்கொள்வது என்று மாணவிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாத்திரைகளை சாப்பிட்ட 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், 7ஆம் வகுப்பு மாணவர் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவ, மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஆசிரியர்கள் சேர்த்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தனியார் காட்டேஜில் ஊழியராக பணிபுரிந்து வந்த ஊட்டியை சேர்ந்த முகமது சலீம் என்பவரது மகள் ஜெய்பா பாத்திமா(13) என்ற 8ஆம் வகுப்பு மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், சிகிச்சைக்கு கொண்டும் செல்லும் வழியில் நேற்றிரவு உடல்நிலை மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவியின் உடல் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அங்கு அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் உடல் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகை தந்திருந்ததால், மருத்துவமனையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்தபிறகு அமரர் ஊர்தி மூலமாக நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. மாணவியின் பெற்றோர் சொந்த ஊரான மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காந்தல் பகுதியில் உள்ள உருது நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேரை பணியிடைநீக்கம் செய்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவி விவகாரத்தில் 2 மருத்துவ ஊழியர்கள் சஸ்பெண்ட் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details