தமிழ்நாடு

tamil nadu

பாஜக மொழி, மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்துகிறது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By

Published : Oct 17, 2022, 6:47 AM IST

மொழி, மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தி பாஜக தனது அரசியலை செய்கிறது என கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மொழி, மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்துகிறது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பாஜக மொழி, மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்துகிறது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தி மொழியை திணித்தும், மத வெறியை தூண்டி விட்டும் மக்களை பாஜக, ஆர்எஸ்எஸ் பிளவுபடுத்துகிறது.

அண்ணாமலை பேட்டை ரவுடியைபோல அரசியல் நாகரீகம் இல்லாமல் கேரள முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரை கேடி என்று பேசியுள்ளார். இதனை பாஜக தலைமை எப்படி அனுமதிக்கிறது? ஆர்எஸ்எஸ் மோகன் பகவத், மத அடிப்படையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத பாஜக, மொழி மற்றும் மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் பல நூறு டிஎம்சி கடலில் கலக்கிறது. முறையான பாசன வசதி செய்து, விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையை தமிழ்நாடு அரசு மாற்ற வேண்டும்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவின் உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றுதான் சிபிசிஐடி விசாரணை முடிவில் தெரிய வரும்‌. வருகிற நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சனாதன தர்மம் குறித்த விளக்கம் தகவல் அறியும் சட்டத்தில் வராது - ஆளுநர் மாளிகை

ABOUT THE AUTHOR

...view details