தமிழ்நாடு

tamil nadu

பெரியார் பல்கலைக்கழகத்தில் 21 மணி நேர சோதனை.. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:20 PM IST

Salem Periyar University: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறை நடத்திய 21 மணி நேர சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Periyar University
Periyar University

பெரியார் பல்கலைக்கழகத்தில் 21 மணி நேர சோதனை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், நேற்று முன்தினம் (டிச.26) பல்வேறு முறைகேடு மற்றும் புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் ஜெகநாதனின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 7 இடங்களில், நேற்று பிற்பகல் (டிச.27) முதல் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

இந்த சோதனையானது சுமார் 21 மணி நேரம் என இன்று பிற்பகல் வரை நடைபெற்றது. ஜெகநாதன் உள்பட அவரது கூட்டாளிகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றிய ஊழல் மற்றும் பணியாளர்கள் கூறி வரும் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை கண்டறிந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே, நேற்று ஜாமீனில் வெளிவந்த அவர், கையெழுத்திடுவதற்காக சூரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது துணை வேந்தர் ஜெகநாதனுக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தொடர் சிகிச்சை பெற்று வரும் அவர், தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க:2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஐஜேகே மூன்று இடங்களில் போட்டி - பாரிவேந்தர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details