தமிழ்நாடு

tamil nadu

பொன்னை ஆற்றில் குளிக்க சென்ற இரட்டையர்கள் உயிரிழப்பு

By

Published : Dec 2, 2020, 9:46 PM IST

ராணிப்பேட்டை: பொன்னை ஆற்றில் குளிக்க சென்ற இரட்டையர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இரட்டையர்கள் உயிரிழப்பு
இரட்டையர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சீகராஜபுரம் ஊராட்சி பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிஷோர், லதா தம்பதி. இவர்களுக்கு 15 வயதில் நரேஷ், நவீன் என்ற இரட்டையர்கள் இருந்தனர்.

இவர்கள் இன்று (டிச.2) பொன்னை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற நரேஷும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர் இருவரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர், சடலங்களை உடற்கூராய்விற்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவர் செவிலியரின் அலட்சியத்தால் மனைவி, குழந்தையை இழந்தவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு!

ABOUT THE AUTHOR

...view details