தமிழ்நாடு

tamil nadu

ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி ஆள் இன்றி கிடப்பு; மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு!

By

Published : Apr 10, 2023, 8:44 PM IST

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி ஆள் இன்றி கிடப்பு;மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு!..
ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி ஆள் இன்றி கிடப்பு;மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு!..

ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி ஆள் இன்றி கிடப்பு;மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு!..

ராணிப்பேட்டை: நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், கடந்த 2021-ஆம் ஆண்டு கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், பள்ளி கட்டிடம் சார்ந்த கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும், அங்கிருந்த பள்ளி மாணவர்களுக்கு அதே பகுதியில் வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருவதாகவும் கூறினர். இதனால், பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க:6 மாத குழந்தையுடன் குடும்பமே கலெக்டர் ஆபிஸில் தீக்குளிக்க முயற்சி.. திருவண்ணாமலை ஷாக்!

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக புறக்கணித்து வருகின்றனர். இந்நிலை தொடர்வதால், பள்ளி மாணவர்கள் அற்று வெறிச்சோடி காணப்படுகிறது. உடனடியாக அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மீண்டும் சிக்கலில் சித்த மருத்துவர் ஷர்மிகா.. மேலும் இரண்டு புகார்கள் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details