தமிழ்நாடு

tamil nadu

பணியில் இருந்த கமாண்டோ வீரர் மாயம்.. உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆர்.காந்தி உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 10:23 AM IST

Ranipet news: ராணிப்பேட்டையில் இருந்து பூனேவிற்கு பணிக்குச் சென்ற கமாண்டோ வீரர் மாயமானதால் அவரை கண்டுபிடித்து தருமாறு அவ்வீரரின் பெற்றோர், அமைச்சர் ஆர்.காந்தியிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

பணியில் இருந்த கமாண்டோ வீரர் மாயம்
பணியில் இருந்த கமாண்டோ வீரர் மாயம்

பணியில் இருந்த கமாண்டோ வீரர் மாயம்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (22). இவர், கடந்த 2019ஆம் ஆண்டு ராணுவத்தில் தேர்வாகி பணிக்குச் சென்றுள்ளார். தற்போது இவர் பூனேவில் உள்ள வான்வழி பாதுகாப்பு பிரிவில் கமாண்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தங்கும் முகாமில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவ்வாறு வெளியே சென்றவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, வான்வழி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சதீஷ்குமாரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காணாமல் போன வீரரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ராணுவ வீரர் சதீஷ்குமாரின் பெற்றோர், காணாமல் போன தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு, நேற்று (டிச.16) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். ராணுவ வீரரின் பெற்றோர் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் காந்தி, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:வாடகை தாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் பிரச்சினை; காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details