தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி பேராசிரியைக்கு கத்திக் குத்து; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

By

Published : Apr 7, 2021, 10:53 PM IST

கல்லூரி பேராசிரியை கத்தியால் குத்தி நகையை திருடியவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேராசிரியரை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ராணிப்பேட்டை, ranipet
பேராசிரியரை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை:சிப்காட் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி பேராசிரியை புவனேஷ்வரி (54). கடந்த 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது கீழ் விஷாரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரன் என்பவர் புவனேஷ்வரியிடம் வாடகைக்கு வீடு கேட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து புவனேஷ்வரியிடம் பேச்சுக் கொடுத்து வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட நாகூர் மீரான், மீண்டும் நான்கு நாள்கள் கழித்து வீட்டிற்கு முன்பணம் கொடுப்பது போன்று வந்தார்.

அப்போது, புவனேஷ்வரியை கத்தியால் குத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த இருந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 6 சவரன் தங்க நகையைப் பறித்து சென்றார். இந்நிலையில், படுகாயம் அடைந்த புவனேஷ்வரி வாலாஜா மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட புவனேஷ்வரி தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். தொடர்ந்து இது குறித்து புவனேஷ்வரி அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றாவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு வேலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கில் இன்று நீதிபதி பாலசுப்ரமணியன் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், நீதிபதி நாகூர் மீரானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, குற்றவாளி நாகூர் மீரான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:அதிமுக வேட்பாளரின் சொகுசு பங்களாவில் பண பட்டுவாடா: ரூ.91.67 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details