தமிழ்நாடு

tamil nadu

21 வயதில் ஒன்றிய கவுன்சிலர் ஆன இளம்பெண் - நம்பிக்கை அளிக்கும் தீபிகாவின் பேட்டி

By

Published : Oct 15, 2021, 8:02 PM IST

Updated : Oct 15, 2021, 10:29 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்தின் இரண்டாவது வார்டில் 21 வயதான இளம்பெண் தீபிகா என்பவர், ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்
21 வயதில் ஒன்றிய கவுன்சிலர்

ராணிப்பேட்டை:ஆற்காடு ஒன்றியத்தின் இரண்டாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலராக, 21 வயது இளம்பெண் தீபிகா வெற்றி பெற்றிருந்தார்.


இத்தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு ஒன்றியத்தில் இரண்டாவது வார்டுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பட்டதாரியான செல்வி. தீபிகா போட்டியிட்டு 2 ஆயிரத்து 344 வாக்குகள் பெற்று ஆயிரத்து 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள தீபிகா ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த பேட்டியில், 'முதலில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை மகிழ்விக்க வேண்டும். அதில், மிகவும் முக்கியமாக குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வழி செய்வேன். மேலும் சாலை வசதிகள், கழிவுநீர் கால்வாய்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன்'

அரசியல் வந்த காரணம் என்ன?

'நான் அரசியல் வருவதற்கு முக்கியக் காரணம், எனது தந்தை இளவழகன். அவர் அரப்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவராக இருந்தார்.

அவர் தலைவராக இருந்த காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் மிகவும் அழகாக செய்தார். எனவே, அவரிடம் இருந்து எனக்கு இந்த ஆர்வம் வந்தது. நான் வெற்றி பெற்றதற்கான காரணமும் எனது தந்தை தான்' என்று தெரிவித்தார்.

இளம்பெண் தீபிகா என்பவர் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்

அரசியலுக்கு எவ்வாறு வந்தீர்கள்?

'நான் அரசியலுக்கு எதிர்பாராத விதமாகத்தான் வந்தேன். பெண்களுக்கான இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன்'.

இளம் வயதில் ஒன்றிய கவுன்சிலர் ஆவதை எப்படி பார்க்கிறீர்கள்?

'மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த வயதில் இதுபோன்ற ஒரு பதவி கிடைத்திருப்பதை என்னைச் சுற்றி இருப்பவர்கள் பாராட்டுகின்றனர். மேலும் இது போன்றே பல வழிகளில் என்னுடைய பயணம் தொடர வேண்டும் என்று நினைக்கின்றேன்'.

வருங்காலத்தில் அரசியலில் இருப்பீர்களா?

'நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் அரசியலில் முழுமையாக இருப்பேன்' என நமது நிருபர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

Last Updated : Oct 15, 2021, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details