தமிழ்நாடு

tamil nadu

பழுதடைந்த பாம்பன் பாலம் - 50 நாள்களுக்கு பிறகு ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

By

Published : Aug 19, 2021, 5:05 PM IST

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக 50 நாள்களாக பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) ரயில் இன்ஜின் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இன்ஜின் சோதனை ஓட்டம்
இன்ஜின் சோதனை ஓட்டம்

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம். இரண்டரை கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த ரயில் பாலத்தில் சுமார் 143 தூண்கள் உள்ளன. பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மெதுவாக 20 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.

இந்நிலையில், பாம்பன் பாலத்தில் அவ்வப்போது பழுது, சென்சார் கோளாறு ஏற்படுகிறது. இதனால், பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் செல்ல தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கும்.

இந்தச் சூழலில் ஜூன் 28ஆம் தேதி பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 50 நாள்களுக்கும் மேலாக பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் செல்ல தடை விதித்து, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

சோதனை ஓட்டம்

இதையடுத்து, பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் தொடர்ந்து அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) ரயில் இன்ஜினை மட்டும் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இன்ஜின் சோதனை ஓட்டம்

இந்த சோதனை ஓட்டத்திற்கு பின்பு ரயில் பாலத்தில் ஏற்பட்ட அனைத்துப் பழுதுகளும் சரியானதை உறுதிபடுத்திய பின்பு மீண்டும் பாம்பன் பாலம் வழியாக அனைத்து ரயில்களும் செல்ல அனுமதிக்கப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சாத்தூர் - தூத்துக்குடிவரை இரட்டை ரயில் பாதை பணி - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details