தமிழ்நாடு

tamil nadu

பாம்பன் பாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

By

Published : Aug 2, 2021, 6:03 PM IST

கரோனா பரவல் காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட சுற்றுலா பயணிகள், பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்தி கடல் அழகை ரசித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி, அதிகப்படியான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆக.1 முதல் ஆக.3ஆம் தேதி வரை, ராமநாத சுவாமி கோயில் நடை அடைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் நேற்று (ஆக.1) தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்தபடி உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழிமறித்து, திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பான காணொலி

ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள், பாம்பன் பாலத்தின் இரு புறங்களிலும் வாகனத்தை நிறுத்தி, கடலின் அழகை ரசித்து விட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பழனி கோயில் முன் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details