தமிழ்நாடு

tamil nadu

ராமநாதபுரத்தில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தல் - 4 பேர் கைது

By

Published : Jun 28, 2021, 9:19 AM IST

நயினார்கோவில் அருகே சட்டவிரோதமாக 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்ற நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி
ரேஷன் அரிசி

ராமநாதபுரம்: மாவட்டம், நயினார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில், 60 கிலோ வீதம் 3 டன் எடையில் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வாகன ஓட்டி மணிகண்டன், அதில் இருந்த முத்து இருளாண்டி, சரவணன், நாகூர் கனி ஆகிய 4 பேரைக் கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 50 மூட்டைகள் ஏற்றிவந்த வாகனத்தையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:பரமக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தந்தை, மகள் கைது!

ABOUT THE AUTHOR

...view details