தமிழ்நாடு

tamil nadu

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவியோருக்கு மாற்றுத் திறனாளி தம்பதியினர் நன்றி

By

Published : Jun 1, 2021, 12:19 PM IST

ராமநாதபுரம்: பத்து மாத குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய் அளித்து உதவியோருக்கு மாற்றுத் திறனாளி தம்பதியர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதியர்.
அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதியர்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தம்பதியினர் மதுரைவீரன் - மாரி. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பெயர் மணிகண்ட பிரசாத்.

திருமணத்திற்குப் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து குழந்தை பிறந்ததால் மாற்றுத் திறனாளி தம்பதியினர் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஆனால், குழந்தைக்கு இருதயத்தில் இரண்டு துளைகள் இருந்தது தொடர்ந்து தெரிய வந்தது. இதனால் மாற்றுத் திறனாளி தம்பதியினர் ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நூறு நாள் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வரும் தம்பதியினரோ, குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியாமல் பரிதவித்து வந்தனர்.

அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் மாற்றுத் திறனாளி தம்பதியினர்.

இந்நிலையில், இது குறித்து கேள்விப்பட்ட சாயல்குடி உங்கள் நண்பன் அறக்கட்டளை, நாடக நடிகர் ராதா கிருஷ்ணன், குட்டிபுலி பட நடிகர் சக்தி சரவணன், மேலச்செல்வனூர் கிராமத்து யாதவ இளைஞர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து மூன்று லட்ச ரூபாய் பணததை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

தற்போது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவிய நல்ல உள்ளங்களுக்கு மாற்றுத் திறனாளி தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கரோனா நிவாரண நிதி: முதலமைச்சரிடம் ரூ.15 ஆயிரம் வழங்கிய பள்ளி மாணவி!

ABOUT THE AUTHOR

...view details