தமிழ்நாடு

tamil nadu

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 7:00 AM IST

Updated : Oct 30, 2023, 7:18 AM IST

CM Mk Stalin in Muthuramalinga Thevar Guru pooja : முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, பாலம் பணிகள் துவக்கம் உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று உள்ளார்.

Stalin
Stalin

ராமநாதபுரம்: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்.

காலை 9 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்கின்றனர். அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூ உள்ளிட்டோர் குருபூஜையில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விரைந்து உள்ளார். காலை 7.15 மணி முதல் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து மதுரை, மானகிரி ஆவின் சந்திப்பு 2வது நுழைவு வாயில் அருகில் புதிதாக கட்டப்படவுள்ள கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பாலம் மற்றும் மதுரை - தொண்டி சாலையில், சாலை மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து மதுரை, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து ராமநாதபுரம் மாட்டம், பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

விழாவை முன்னிட்டு, 37 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், 12 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க :சேமிப்பை சரியான விதத்தில் முதலீடு செய்துவம் முக்கியம் - முதலமைச்சர் ஸ்டாலினின் உலக சிக்கன நாள் அறிவுரை..!

Last Updated : Oct 30, 2023, 7:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details