தமிழ்நாடு

tamil nadu

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு!

By

Published : Jun 25, 2021, 11:07 PM IST

ராமநாதபுரம்: பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலால் உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பினர்.

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு
பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து நேற்று (ஜூன் 24) 87 விசைப் படகுகளில் மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதில் சில படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக தெரியவருகிறது. இதனையடுத்து அங்குவந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சுப்பாகியால் சுட்டு, இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்த மீனவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது ராமநாதபுரம் பாம்பன் புதுத் தெருவைச் சேர்ந்த லிம் பிரிட்ஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், துப்பாக்கி குண்டுபட்டு விசைப் படகில் ஓட்டை ஏற்பட்டது. படகிலிருந்த யாருக்கும் காயம், உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக மீனவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: 'விடுமுறை நாட்களில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!'

ABOUT THE AUTHOR

...view details